1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (10:29 IST)

இன்றும் 10,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் நிலையில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பில் இருந்து வந்தாலும் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா வெகுவாக குறைந்திருந்தது.  இந்நிலையில் நேற்று 12,193  என இருந்த கொரோனா பாதிப்புகள் இன்று 10,112 ஆக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6780 ஆக உயர்ந்துள்ளது. 9833 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Edited by Mahendran