வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (21:59 IST)

இந்தியா - சீனா உணர்வுபூர்வ எல்லையில் பதற்றம்...

இந்தியா - சீனா இடையே அவ்வப்போது பதற்றம் நீடித்து வந்தாலும், அவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. சமீபத்தில் டோக்லம் எல்லை பகுதியினாலும் பிரச்சனை ஏற்பட்டது. 
 
தற்போது இந்திய ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுயுள்ளார். 
 
ராணுவ வருடாந்திர கருத்தரங்கில் பங்கேற்ற இவர் பின்வருமாரு கூறினார், இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி), பகுதியில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி, அத்துமீறல் மற்றும் மோதல்போக்கு காரணமாக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
பாகிஸ்தானில் மத அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது. தீவிரவாத அமைப்பின் சிந்தாந்தத்தை கிழக்கு நோக்கி பரப்பும் ஊடகமாக பாகிஸ்தான் விளங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.