வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (18:18 IST)

நாளை முதல் இந்தியா-கனடா நேரடி விமான சேவை துவக்கம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. அதேபோல் கனடாவுக்கும் நேரடி விமான சேவை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாளை முதல் மீண்டும் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு விமானத்தை இயக்க கனடா அரசு அனுமதி அளித்துள்ளது
 
முதல் கட்டமாக டெல்லியிலிருந்து இடையே ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா விமானங்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் 18 மணி நேரத்திற்கு முன்பு இந்த பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கனடா அரசு தெரிவித்துள்ளது 
மேலும் வேறு நாடுகள் வழியாக கனடா வருபவர்களும் அந்தந்த நாடுகளில் இருந்து பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.