1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (10:18 IST)

முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டில் கட்டு கட்டாக பணம்.. மெத்தையில் பதுக்கி வைப்பு..!

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா என்பவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 23 அட்டைப் பெட்டிகளில் மொத்தம்  42 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பூட்டி வைத்திருந்த ஒரு அறையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அந்த அறையில் உள்ள மெத்தைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு சாதாரண கவுன்சிலர் வீட்டில் 42 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டிலேயே இவ்வளவு பணம் என்றால் தற்போதைய கவுன்சிலர்கள் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கும்? எம்எல்ஏ எம்பிகள் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கும் ? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran