புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (12:26 IST)

போங்கயா... நீங்களும் உங்க பட்ஜெட்டும்..: கருப்பு சட்டையில் மாஸ் காட்டும் சந்திரபாபு நாயுடு

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் அம்சங்களை பொருப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு முதல் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்கள் என அடி மட்டத்தொண்டர்கள் வரையில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து மோடியின் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
ஆந்திர மாநிலத்துக்கு தருவதாக சொன்ன சிறப்பு மாநில அந்தஸ்து தாரதது ஆகியவற்றில் மத்திய அரசு கைவிறித்ததால் கடுப்பான சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகி மோடியையும் அவரது ஆட்சியையும் விமர்சித்து வந்தார்.
 
தற்போது இந்த பட்ஜெட்டை எதிர்க்க கடந்த 20 ஆண்டுகளாக தன் டிரேட் மார்க் முழுக்கை கதர் சட்டையில் இருந்து மாறி கருப்புச் சட்டை அணிந்து கெத்து காட்டியுள்ளார்.