வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (08:19 IST)

வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி!

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக இருந்து வரும் இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி  ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யலாம்
 
2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. இதன்படி வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பைத் தாண்டும் நபர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
 
இந்த நிலையில் 2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு சம்பளம், மற்ற வருமானம், வீடு, விவசாயத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வருமானம், என ஆண்டு வருவாய் 50 லட்சத்திற்குள் உள்ள தனிநபர், ITR 1 என்ற படிவம் மூலம் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமான வரியை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்றும் தாக்கல் செய்யலாம். இந்தக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக இருந்த நிலையில் தற்போது, வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அதன்படி பொது மக்கள் தங்கள் வருமாவரி கணக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தாக்கல் செய்யலாம். அதற்கு மேலும் காலதாமதமாக வருமான கணக்குத் தாக்கல் செய்தால் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அபராதம் மற்றும் பிற பிரச்சனைகளை தவிர்க்க ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது