1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜனவரி 2025 (12:43 IST)

அரசு பள்ளியில் கல்வி.. குடும்ப கஷ்டம்.. விவசாயி மகன்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் பின்னணி..!

இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள நாராயணன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற இவர் விவசாயி மகன். குடும்ப கஷ்டங்கள் இருந்தபோதும், ஆசிரியர்களின் துணையோடு கடினமாக படித்து இந்த நிலையை எட்டியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் தனது கிராமமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மேலக்காட்டுவிளை  என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும்,  எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்ததையும், குடும்ப கஷ்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், ஆசிரியர்கள் தகுந்த உதவி செய்ததன் மூலம் உயர்ந்த நிலையை அடைந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது தன் மேல் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும், பிரதமர் தன்னை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். 41 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான இவர், பல்வேறு திட்டங்களை இயக்குனராக ஏழு ஆண்டுகள் நிர்வகித்துள்ளார்.

இந்த அனுபவங்கள் இப்போது தமக்கு பயனளிக்கும் என்றும், இஸ்ரோ மூலம் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற தனது பங்களிப்பு ஆற்றுவதாகவும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். 1984 முதல்  இஸ்ரோவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran