வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (19:49 IST)

ஸ்டேஷன் மாறி போன ரயில்: பயணிகள் அதிர்ச்சி

புதுடெல்லிக்கு போக வேண்டிய பாசஞ்சர் ரயில் ஒன்று பழைய டெல்லிக்கு மாறி சென்றதால் அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்

ஹரியாணா மாநிலத்தில் உள்ள சோனிபட் ரயில் நிலையத்தில் இருந்து பழைய டெல்லிக்கு ஒரு பாசஞ்சர் ரயிலும், பானிபட் நகரத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஒரு பாசஞர் ரயிலும் தினமும் இயக்கப்படுவது வழக்கம்

இந்த நிலையில் இன்று  தண்டவாளத்தை மாற்றி விடும் ஊழியர் ஒருவர் குழப்பத்தில் செய்த தவறு காரணமாக பானிப்பட்டில் இருந்து புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பாசஞர் ரயில் பழைய டெல்லி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து விசாரணை செய்த ஸ்டேஷன் அதிகாரி பின்னர் அந்த ரயிலை மீண்டும் புதுடெல்லிக்கு மாற்றிவிட்டனர். இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் காலதாமதமாக அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்றும், ரயிலை திருப்பிவிட்ட ஊழியரிடம் விசாரணை செய்யப்படும் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றன