வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:20 IST)

செய்தித்தாளில் மடித்த உணவுகளை உண்டால் ...கேன்சர் வருமா ? ஆய்வில் அதிர்ச்சி !

நம்மூர் கடைகளில் எல்லாம் போண்டா, பஜ்ஜி போன்ற உணவுப்பொருட்களை பழைய நியூஸ் பேப்பர்களில் மடித்து கொடுப்பார்கள். அதற்காக சில பழைய நியூஸ் பேப்பர்களை எடைபோட்டு வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் செய்தித்தாலில் உணவுகளை மடித்துச் சாப்பிடும் போது, அதில் உள்ள கெமிக்கல்கள் உணவுப்பொருட்களில் கலந்து உடலுக்கு எதிர்மறையான ஆபத்துகளை உண்டாக்குவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக செய்தித்தாள்களில் எண்ணெய் பொருட்களை வைத்து மடித்துக்கொடுப்பதால் அதிலுள்ள ரசாயனப் பொருட்கள், பலவகைகளில் நம் உடலுக்குள் சென்று பல ஆபத்துக்களை விளைவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறமிப்பொருட்கள் உடலுக்குள் சென்று புற்று நோய்களை உண்டாக்குவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எஃப் எஸ் எஸ் ஏய் ஐ (fssai) இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடமும் சாலையில் உள்ள கடைகளிலும் பரப்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 
நம் உடல்நலத்தை காப்பது நம் பயன்படுத்தும் பொருட்களில் கூட உள்ளது உண்மைதான்.