ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (11:33 IST)

10 நாட்களில் பதவி விலகாவிட்டால்..! யோகி ஆதித்யநாத்க்கு கொலை மிரட்டல்! - பின்னணியில் பிஷ்னோய் கும்பலா?

10 நாட்களில் பதவி விலகாவிட்டால் யோகி ஆதித்யநாத் கொல்லப்படுவார் என வந்துள்ள மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த சில காலமாக வட மாநிலங்களில் அரசியல் பிரபலங்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அஜித் பவாரின் சிவசேனா கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் மும்பையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை செய்தது தாங்கள்தான் என பிஷ்னோய் கும்பல் அறிவித்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது.

 

அதை தொடர்ந்து பாபா சித்திக்கிற்கு நெருக்கமானவரும், நடிகருமான சல்மான்கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொல்லப்படுவார் என மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது.

 

அதில் பாபா சித்திக் கொல்லப்பட்டது போல கொல்லப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளதால் இது பிஷ்னோய் கும்பலின் நேரடி மிரட்டலா அல்லது வேறு யாராவது மிரட்டல் விடுத்துள்ளார்களா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K