திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (08:44 IST)

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமற்றது? – மருத்துவ நிபுணர்கள் கருத்து!

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது அவசியமற்றது என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் 18வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் துறை தலைவர் “குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமற்றது. பெரும்பாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி பெரியவர்கள், துணை நோய் பாதிப்பு உள்ளவர்களாலேயே அதிகம் கொரோனா பரவுகிறது எனும்போது அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்துவதை உறுதிபடுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு போடும் எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிகான கடைசி ஆணியாக அமைந்துவிட கூடாது” என தெரிவித்துள்ளார்.