செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (12:42 IST)

விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள், விவாதங்கள் வேண்டாம்! – விமானப்படை வேண்டுகோள்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக் குறித்து தேவையற்ற யூகங்களை தவிர்க்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர்களது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் இருந்த கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்து குறித்து வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பல யூகங்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.

இந்த விபத்து குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய விமானப்படை, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய முப்படை சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறது. முறையான விசாரணை தகவல்கள் தெரிய வரும் வரை தேவையற்ற யூகங்கள், விவாதங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.