வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (21:36 IST)

ஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு

ஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் புத்த மதத்துக்கு மாறியது போல் நானும் மதம் மாறப் போகிறேன் என முன்னாள் உபி மாநில முதல்வரும்  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
புத்த மதத்திற்கு நான் மட்டுமின்றி இன்னும் ஆயிரக்கணக்கான மக்களுடன் மாறி தீட்சை பெறுவேன் என்றும் ஆனால் அதற்கு சரியான காலம் வர வேண்டும் என்றும், அரசியலில் நாங்கள் இருந்தாலும் அம்பேத்கரை பின்பற்றுகிறவர்களால் இத்தகைய மதமாற்றம் என்பது சாத்தியமானதுதான் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
 
ஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு
ஆனால் மாயாவதியின் இந்த பேச்சை உபி மாநிலத்தில் உள்ள பலர் எதிர்த்து வருகின்றனர். அரசியலுக்காக மாயாவதி இவ்வாறு பேசுவதாகவும், ஒருவேளை மாயாவதி மதம் மாற முடிவு செய்தால் அவர் அரசியலில் இருந்து விலகிய பின்னரே மாறுவார் என்றும், அரசியலில் இருக்கும் வரை அவர் மதம் மாற வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர்