1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (08:01 IST)

I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? அதிரடி அறிவிப்பு..!

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியின் சார்பில் இரண்டு கூட்டங்கள் கூட்டப்பட்டன என்பது தெரிந்ததே. 
 
முதலாவது கூட்டம் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நடைபெற்றது என்பதும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த இரண்டு கூட்டங்களிலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது என்பதும் ஒவ்வொரு மாநில கட்சிகள் கூட்டணி சேர்ந்து பாஜக வேட்பாளரை தோற்கடிக்கும் வியூகம் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இரண்டு கூட்டங்களுக்கு பிறகு மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நடைபெறும் என்றும் வரும் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva