எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!
ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஸ்ரீதர் வேம்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆய்வு பணிகள் ஈடுபட போவதாக கூறியுள்ள நிலையில் அவர் அரசியலில் ஈடுபட போவதாகவும் பாஜகவில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நான் அரசியலில் சேர்வதாக ஒரு செய்தி பரவி வருவதை கேள்விப்பட்டேன். அதை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது.
அடுத்த வாரம் நடைபெற உள்ள தொழிற்துறை ஆய்வாளர் குழுவிற்கு ஏஐ பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியை வழங்க நான் தீவிரமாக தயாராகி வருகிறேன்.
எனவே எனக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை துளியும் இல்லை, ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி தான் எனது கனவு, அரசியல் செய்வதற்கான நேரமும் எனக்கு இல்லை, எனவே நான் யாரிடமும் அரசியலில் சேர்வது குறித்து பேசவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
Edited by Mahendran