1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (11:43 IST)

நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை..! ஆபாச வீடியோக்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..! பிரஜ்வல் ரேவண்ணா!

Prajwal Revanna
ஆபாச வீடியோக்களில் இருப்பது நான் இல்லை என்றும் அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
 
பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹசன் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா நேற்று கைது செய்யப்பட்டார். அவரை ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
இந்நிலையில் ஆபாச வீடியோக்கள் சம்பந்தமாக பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவரிடம் 161 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக வைரலான ஆபாச வீடியோக்களை காண்பித்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தன் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் பிரஜ்வல் மறுத்தார்.
 
மேலும்,  நீங்கள் காட்டிய வீடியோக்களில் இருப்பது நான் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் எனக்குப் பரிச்சயமானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நான் யாரையும் பலாத்காரம் செய்ததில்லை என்றும் பலாத்கார புகார்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பிரஜ்வல் தெரிவித்துள்ளார்.ஆபாச வீடியோக்களை படம் பிடிக்க பயன்படுத்திய செல்போன் எங்கே என்று அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கேட்டனர்.


அந்த செல்போன் கடந்தாண்டு தொலைந்து விட்டதாகவும்,  இது தொடர்பாக ஹோலேநரசிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார். அந்த செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.