செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (10:28 IST)

என் மனைவி தினமும் குளிக்க மறுக்கிறார்… வித்தியாசமான காரணம் சொல்லி விவாகரத்துக் கேட்ட நபர்!

உத்தர பிரதேசத்தில் இப்படி ஒரு காரணம் சொல்லி ஒரு நபர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் சண்டூஸ் என்ற பகுதியைச் சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவி தினமும் குளிக்க மறுப்பதாகக் காரணம் சொல்லி முத்தலாக் கொடுத்துள்ளார்.

ஆனால் அவரின் மனைவி மகளிர் காவல் நிலையத்தில் விவாகரத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் கணவர் விடாப்பிடியாக விவாகரத்து  வேண்டும் எனக் கூற நீண்ட நேர அறிவுரைக்குப் பின் இருவருக்கும் கால அவகாசம் கொடுத்துளனர்.