திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (11:42 IST)

முதலமைச்சரின் கார் திருடு போக யார் காரணம்? டெல்லி போலீஸ் கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடு போனதற்கு அவர் செய்த தவறுகளே காரணம் என டெல்லி போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.



 
 
துணை நிலை ஆளுனரின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கும் டெல்லி போலீசார் சமீபத்தில் திருடு போன டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை உபி மாநிலத்தில் கண்டுபிடித்தனர். 
 
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலிசார், 'முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனக்குறைவே கார் திருடுபோனதற்கு காரணம் என்றும் சரியான பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தாமல் 200 மீட்டர் அவர் தள்ளி காரை நிறுத்தியுள்ளதாகவும், காரில் ஜிபிஎஸ், கியர் லாக், ஸ்டீரியர்ங்க் லாக் உள்பட எந்த நவீன வசதிகளையும் அவர் பயன்படுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்