ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (17:17 IST)

மச்சினிகளுடன் குதுகல குளியல்: மனைவியின் கண் முன்னே நடந்த விபரீதம்!

தெலங்கானாவில் மனைவியின் கண் முன்னே அவரது கணவன் மற்றும் தங்கைகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜனாகான் மாவட்டத்தை சேர்ந்தவர் அபினாஷ். இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு சமீபத்தில் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
 
சனிக்கிழமை விடுமுறை முன்னிட்டு தனது மனைவி மற்றும் மச்சினிகளுடன் பொம்மபூர் ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தனது மச்சனிகளுடன் ஏரியில் குளித்துள்ளார். அவரது மனைவி கரையில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வந்தார். 
 
அப்போது தெரியாமல் ஆழத்திற்கு சென்ற அபினாஷ் காப்பாற்றும்படி சைகை காட்ட, அவரை காப்பாற்ற மைத்துனிகள் 2 பேரும் முயற்சித்துள்ளனர். ஆனால், துரிசஷ்டவசமாக 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
கரையில் அமர்திருந்த மனைவி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடு வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 3 பேரின் சடலத்தையும் மீட்டனர்.