1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (14:24 IST)

பருப்பு குறித்து பொறுப்பாக பேசிய பாபா ராம் தேவ்!

இந்தியாவில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவசர கூட்டம் எல்லாம் கூட்டி விவாதித்தார்.


 
 
இந்நிலையில் பருப்பு விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு யோகா சாமியார் பாபா ராம் தேவ் ஒரு சிறப்பு யோசனை கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா சாமியார் பாபா ராம் தேவ் தந்த அந்த யோசனை நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
 
பருப்பு விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்கள் அதனை எதிர்கொள்ள, அதில் தண்ணீரை அதிகம் ஊற்றி பருப்பை குறைவாக வைத்து சமைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். பருப்பு குறித்து இவ்வளவு பொறுப்பாக பாபா ராம் தேவ் பேசுவாரா என பலரும் வியப்பில் உள்ளனர்.