வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (22:52 IST)

இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் இத்தனை கோடியா??

இன்றைய காலக்கட்டத்தில் இணையதள சேவை இல்லாமம் உலகமே இயங்காது என்றபடி உலகம் வேகமாக சுழன்றுவருகிறது.

உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வருவதற்கு இணையதள சேவைகளின் பங்கு முக்கியமானது. கொரொனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடம் படிக்கவும், ஆன்லைன் மூலம் பரீட்சை எழுதவும்  இது கூடுலாகப் பயன்படுகிறது.

இந்நிலையில் இணைய சேவை வேகத்தின் தரவரிசையில் இந்தியா உலகளவில் (12.41 Mbps ) 131 வது இடம் பிடித்துள்ளது.

சுமார் 183.03 Mbpd உடன் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது மற்றும் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடுவதற்கான புது விதிமுறைகளை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.ஒடிடி தளங்கள் 13+16+ என வயது வந்தவர்களுக்கு மட்டும் என படங்களை வகைப்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் டுவிட்டரை 1.75 கோடிப்பேரும், இன்ஸ்டாகிராமை 21 கோடிப் பேரும், ஃபேஸ்புக்கை 41 கோடிப்பேரும், யுடியூப் இணையதளத்தை 44.8 கோடிப்பெரும், வாட்ஸ் ஆப்பை 53 கோடிப்பேரும் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்துள்ளது.