புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (08:39 IST)

எந்தெந்த மாநிலத்தில் எத்தனை ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்?

எந்தெந்த மாநிலத்தில் எத்தனை ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்?
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் குறித்த தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 22 மாவட்டங்கள் என்பதும் அவை சென்னை, திருச்சி, விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்கள், ஆந்திராவில் 11 மாவட்டங்கள், ராஜஸ்தானில் 11 மாவட்டங்கள், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 9 மாவட்டங்கள், தெலுங்கானாவில் 8 மாவட்டங்கள்,  குஜராத்தில் 5 மாவட்டங்கள், மேற்குவங்கம், கேரளாவில் தலா 4 மாவட்டங்கள், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 மாவட்டங்கள், பஞ்சாபில் 2 மாவட்டங்கள் மற்றும் சண்டிகாரில் ஒரு மாவட்டம் ஆகியவை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏப்ரல் 20ஆம் தேதி ஊரடங்கு ஒருசில பகுதிகளுக்கு தளர்த்தப்பட்டாலும், ஹாட்ஸ்பாட் மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது