திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:48 IST)

பச்சை குத்தியதால் பரவிய எயிட்ஸ்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் இருவருக்கு எச்.ஐ.வி கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு பச்சை குத்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சமீபத்தில் 2 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இருவருக்கும் எப்படி இந்த தொற்று ஏற்பட்டது என மருத்துவ அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டனர்.

அப்போது இருவருமே சமீபத்தில் டாட்டூ குத்திக் கொண்டதும், அதுவும் ஒரே டாட்டூ கடையில் குத்திக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. டாட்டூ குத்த பயன்படுத்தப்படும் ஊசி விலை அதிகம் என்பதால் திரும்ப திரும்ப ஒரே ஊசியை வைத்து பலருக்கு டாட்டூ குத்தி இருக்கலாம் என்றும் அதனால் எச்.ஐ.வி பரவி இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால் அந்த கடையில் டாட்டூ குத்திக் கொண்ட மற்றவர்களிடமும் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்லது.