திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (18:20 IST)

சசிகலாவை சிறைக்கு அனுப்பியவர் ; இன்று தினகரன் தரப்பு வழக்கறிஞர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவை சிறைக்கு அனுப்பியவர் என்பது தெரியவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நீதிபதி குன்ஹா சிறைத் தண்டனை வழங்கினார். ஆனால், மேல் முறையீட்டில், நீதிபதி குமாரசாமி அவர்களை விடுதலை செய்தார். அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதன் பின் விசாரணை நடந்தது. ஆனால், தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டது. 
 
அந்நிலையில்தான், கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பதை  உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சுட்டிக் காட்டினார். அதையடுத்து, ஒரு வாரத்தில் தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அந்த தீர்ப்பில்தான் சசிகலா உள்ளிட்ட அனைவரும் சிறைக்கு சென்றனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தான் தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடினார். அவரின் திறமையான வாதத்தாலேயே 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.