புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (18:29 IST)

இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம்  அயோத்தியில் இருக்கும் ஒரு பள்ளிவாசலின் இடம் ஹனுமன் கரோஹி கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டது.


 


அதனால், நவாப் ஷுஜாவுல்லா என்பவர் அந்த நிலத்தை ஹனுமன் கரோஹி கோவிலுக்கே கொடுத்தார். ஆனாலும், ஹிந்துக்கள், அப்பள்ளிவாசலில், தொழுகை நடத்த முஸ்லீம்களை அனுமதித்தனர். இந்நிலையில், அப்பள்ளிவாசல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதை அடுத்து, ஹனுமன் கரோஹி கோவில் நிர்வாகத்தினர் தாமாக முன்வந்து, அப்பள்ளிவாசலை சரி செய்து தருவதாகவும், அதற்கான செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், “இதுவே இந்தியா, இதுவே ஒற்றுமை” என மகிழ்ச்சியில் உள்ளனர்.