கொலை செய்ய துணிந்த ஓரினச்சேர்க்கை ஆசை!

கொலை செய்ய துணிந்த ஓரினச்சேர்க்கை ஆசை!


Caston| Last Updated: வியாழன், 15 டிசம்பர் 2016 (18:50 IST)
மேற்குவங்கம் மாநிலத்தில் தோழிகள் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதில் ஒரு தோழிக்கு திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதனால் தங்கள் உறவுக்கு அவர் வந்து விடுவாரோ என எண்ணி அந்த மாப்பிள்ளையை இருவரும் சேர்ந்து கொலை செய்ய துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
மேற்குவங்கம் கல்னா பகுதியை சேர்ந்தவர் தீபா பாண்டிட், இவர் சிரஞ்சித் பால் என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து திருமணம் செய்ய இருந்தார். ஆனால் அதே நேரத்தில் தீபாவுக்கு தன்னுடைய நெருங்கிய தோழி நசிமா கதுன் என்பவருடன் ஓரினச்சேர்க்கை பழக்கமும் இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் தீபாவுக்கு திருமணம் நடைபெற இருந்ததால் நசீமா தீபாவிடம் வந்து முறையிட்டுள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து சிரஞ்சித் பாலை கொலை செய்ய திட்டமிட்டு அவரை திருமணத்துக்கு முந்தைய நாள் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் தீபா.
 
சிரஞ்சித் பால் வீட்டிற்கு வந்ததும் நசீமா அவர் மீது பாய்ந்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் சிரஞ்சித் பால் அவரை தள்ளிவிட்டுள்ளார். பின்னர் தீபா தனது கையில் இருந்து கத்தியால் சிரஞ்சித் பாலை கத்தியால் குத்த அவர் அங்கிருந்து தப்பித்து ஓடி அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
காவல்துறையின் விசாரணையில் தீபாவின் பெற்றோர்கள் தீபாவும் நசீமாவும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தங்களுக்கு முன்னதாகவே தெரியும் எனவும், அவர்களை பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை என தெரிவித்தனர். தீபா, நசீமா இருவரும் இந்து முஸ்லீன் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :