வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (17:13 IST)

இந்து அமைப்பின் தலைவர் நடுரோட்டில் சுட்டுக்கொலை - அதிர்ச்சி வீடியோ

பஞ்சாம் மாநில இந்து அமைப்பின் தலைவர் விபின் ஷர்மா மர்ம நபர்கள் நடுரோட்டில் சுட்டுக்கொன்ற சம்பவம் வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் இந்து ஷங்கராஷ் சேனா அமைப்பின் மாநில தலைவராக விபின் ஷர்மா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி, அமிர்தசரஸின் பாரத் நகர் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்போது, சிங் வேடத்தில் அங்கு வரும் நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார். அவரின் நெஞ்சு பகுதியில் அவர் பலமுறை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி செல்கிறார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது..
 
இந்த வீடியோவில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரிவதால், குற்றவாளியை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.