வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு: பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி என்ற பகுதியில் திடீரென மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பிரச்சினையானது
 
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது இடைக்கால உத்தரவாக பள்ளிகளில் மாணவிகள் அனைவரும் மத அடையாளங்கள் கொண்ட உடை அணியக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
ஆனாலும் உத்தரவை மீறி சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனையடுத்து உடுப்பி மற்றும் ஒருசில பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.