திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (18:17 IST)

ஃபாஸ்டேக் அட்டை இலவசம்!? – நெடுஞ்சாலை ஆணையம்!

சுங்க சாவடிகளில் பணம் செலுத்த ஃபாஸ்டேக் என்னும் டிஜிட்டல் வசதி டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கு வாகன ஓட்டிகள் முன்கூட்டியே தங்கள் வண்டி எண், சான்றிதழ் ஆகியவற்றை சுங்க கேட்களில் காட்டி ஃபாஸ்டேக் அட்டையை பெற்று வாகன கண்ணாடிகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

அந்த எண்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஃபாஸ்டேக் அட்டைமூலம் டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான ஃபாஸ்டேக் அட்டை விநியோகம் ஏற்கனவே சுங்கசாவடிகளில் தொடங்கிவிட்டன. அட்டையை பெறுவதற்கு 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் அதன் அப்ளிகேசம் மூலம் அந்த தொகையை கட்டினால் 50 ரூபாய் கேஷ்பேக் அறிவித்தது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை 40 சதவீத வாகன ஓட்டிகள் மட்டுமே ஃபாஸ்டேக் அட்டை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்களும் டிசம்பர் 1க்கு முன்னதாக ஃபாஸ்டேக் அட்டைகளுக்கு பதிவு செய்து பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் ஃபாஸ்டேக் அட்டை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் ஃபாஸ்டேக் பதிவுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் எனவும் நெடுஞ்சாலை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.