வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (14:39 IST)

டெல்லியில் வரலாறு காணாத மழை: சாலையில் வெள்ளநீரால் பொதுமக்கள் அவதி!

delhi rain
டெல்லியில் வரலாறு காணாத மழை: சாலையில் வெள்ளநீரால் பொதுமக்கள் அவதி!
டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் 2007ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் தற்போது வெள்ளத்தில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அது மட்டுமின்றி தென் கிழக்கு, தெற்கு டெல்லி உள்பட பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 40 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கனமழை காரணமாக டில்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் அந்தப் பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை பெற முடியாமல் சிக்கலில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva