புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (05:23 IST)

குஜராத்தில் விழுந்தது வட்டவடிவ விண்கற்களா? பொதுமக்கள் பீதி

குஜராத் மாநிலத்தில்,நேற்று திடீரென பெய்த ராட்சத மழையின் நடுவே ஆங்காங்கே ஆலங்கட்டி விழுந்தது. ஆனால் இந்த ஆலங்கட்டியில் ஒருசில கற்கள் வட்ட வடிவில் விண்கற்கள் போல் இருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.



 


குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான சூரத் அருகே உள்ள மாந்த்வி என்ற பகுதியில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன்போது, விண்ணில் இருந்து கற்கள் விழுவதைப் போல பலத்த சத்தத்துடன் ஆலங்கட்டிகள் வீட்டின் கூரைகள் மேல் விழுந்ததால்  தட தடவென பெரும் சத்தமும் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை

விண்ணில் இருந்து விழுந்த வட்ட வடிவ கற்கள் விண்கற்கள் போல் இருந்தததால் அந்த கற்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் இதுபோன்ற நேரத்தில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று வட்டவடிவ கற்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.