வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (15:00 IST)

இந்து கோவிலை இடித்து கட்டியதா மசூதி? – ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!

Gyanwabi masjid
வாரணாசியில் உள்ள மசூதி ஒன்று இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில் அங்கு ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகள் முன்னதாக பாபர் மசூதி வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அதுபோல பல பகுதிகளில் கோவில்கள் இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் நிலவி வருகின்றன.

அவற்றில் வாரணாசி ஞானவாபி மசூதி சர்ச்சையும் ஒன்று. வாரணாசியில் உள்ள இந்த மசூதி முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாகவும், ஔரங்கசீப் காலத்தில் அதை இடித்து அங்கு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் தொடர்ந்து பேச்சு நிலவி வருகிறது.

இதுகுறித்து மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என வாரணாசி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் தேவையான ஆய்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.