செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:18 IST)

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி சீலாம்பூர் பகுதியில், உள்ள கே பிளாக் என்னும் குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் 10 க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரை தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.