வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (08:56 IST)

குஜராத், இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேத்தில், நடைபெற்றத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது
 
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்பது நண்பகலுக்குள் தெரிய வரும்.