வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (16:04 IST)

பாமக இதனால் தான் போட்டியிடவில்லை: அன்புமணி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்து குரல் கொடுத்து வருகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்று போராடிய திமுகவே தற்போது தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கூற ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஆர்.கேநகரில் தேர்தலை நடத்தினால் அதிகளவு பணப்பட்டுவாடா நடக்கும் என முன்பே தெரியும் என்றும் அதனால் தான் பாமக போட்டியிடவில்லை' என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த இடைத்தேர்தலை நடத்துவதற்கு பதில் தள்ளி வைத்துவிட்டு, பொதுத்தேர்தலுடன் சேர்த்து ஒரே தேர்தலாக நடத்தலாம், என்றும் அன்புமணி ஆலோசனை கூறியுள்ளார். அன்புமணியின் ஆலோசனையை தேர்தல் கமிஷன் பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்