திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (10:16 IST)

குஜராத்தில் பாஜக முன்னிலை

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது. குஜராத்தில் பாஜக முதல் இடத்தை வகிக்கிறது
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேத்தில், நடைபெற்றத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
 
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 104 இடங்களைப் பிடித்து பாஜக முதல் இடத்திலும், 75 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 38 இடங்களைப் பிடித்து முதல் இடத்திலும், காங்கிரஸ்  23 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.