1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (11:18 IST)

ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொடூரமாக கொன்ற திருடர்கள்: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 9ம் தேதி ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொலைசெய்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு மாவத்தில் அமைந்துள்ள ஏ.டி.எம். மையத்தில் இரவு காவலாளி உள்ளே உறங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு திருடர்களில் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கொடூரமாக கட்டையால் தொடர்ந்து தாக்கி கொலை செய்தான். பின் ஏ.டி.எம். மையத்திலிருந்து பணத்தை திருடி சென்றான்.

இந்த சம்பவம் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...