ஜிஎஸ்டி அமலாக்கம்: புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு!!
ஜிஎஸ்டி அமலாகவுள்ள நிலையில் அதனை சார்ந்த வேலைவாய்ப்புகள் வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே வரி விதிக்கும் விதமாக ஜிஎஸ்டி-யை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரும் ஜுலை 1 முதல் நாடு முழுவதும் அமலாகவுள்ளது.
.அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜிஎஸ்டி பதிவுக்காக மேற்கொள்ளவுள்ள செலவு மட்டுமே ரூ.35 ஆயிரம் கோடியைத் தாண்டும் என தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி முழுக்க முழுக்க கணினிமயமாக்கப்பட்டது மற்றும் பல்வேறு தொகுதிகளைக் கொண்டது. எனவே கணினி மற்றும் கணக்காளர்களுக்கான தேவை அதிகரிக்கும்.
இதுபோல பல்வேறு வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களும் கணினி, ஸ்கேனர் மற்றும் பிரின்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.