திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (19:08 IST)

நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வாங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!

borewell1
நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வாங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!
வீடுகள் தொழிற்சாலைகள் உள்பட அனைவரும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு அனுமதி வாங்க வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
 
 நீச்சல் குளம, சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட அனைத்து நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.
 
மேலும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரூபாய் 10,000 பதிவு கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிலத்தடிநீர் எடுப்பதற்காக அனுமதியை பெற்று கொள்ள பயனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
 
இவ்வாறு  மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது