ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified சனி, 5 நவம்பர் 2022 (17:24 IST)

56 வயதில் பேத்தியை பெற்றெடுத்த பாட்டி! நெகிழ்ச்சி சம்பவம் ...வைரல் புகைப்படம்

american nancy
அமெரிக்க நாட்டில் 56 வயதான பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்க்தியுள்ளது.

உலகில் உள்ள பெண்கள் தாய்மையை அடைவதை பெரும்  பாக்யமாகக் கருதுவர். ஒரு தாம்பத்யத்தில் அடையாளமாகவும், தங்களின் வாரிசாகவும் இந்தக் குழந்தப் பேறு பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கருப்பை அகற்றப்பட்டதால், அவரால் குழந்தைப் பெற்றெடுக்க முடியாத சூழலில், அவரது மாமியார் நான்சி(56) தன் மகன் மற்றும் மகளுக்காக கருவைச் சுமந்து பேத்தியைப் பெற்றெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்சி மற்றும் அவரது மருமகளுக்கு மக்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj