வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (21:02 IST)

தாத்தாவை புதைக்க குழிதோண்டுகையில் உயிரிழந்த பேரன் !

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் என்ற பகுதியில் வசித்து வந்தவர் முகம்மது யூசுப். இவர் வயது மூப்பின் காரணமாகக் காலமானார். இதையடுத்து, இவரது பேரன் சலீம் என்பவர் தனது நண்பர்களுடன் தாத்தாவை புதைக்க எண்ணினார்.

அப்போது, மண்ணில் குழிதோண்டித் தாத்தாவைப் புதைக்கையில்,  சலீமுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதனால் பதறிய நண்பர்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், தாத்தாவுக்கு சலீம் குழிதோண்டிய இடத்திலேயே அவரையும் குழிதோண்டிப் புதைத்தனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.