திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (18:33 IST)

வருமானவரியை இன்னும் கணக்கை தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான வருமானத்திற்கான வருமான வரியை ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்து வரியை கட்டி முடிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் வருமான வரியை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்து ரூ.5000 அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக்கொண்டு வந்தனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி வருமான வரியை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒருமாத கால அவகாசம் இருப்பதால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பொறுமையாக தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.