1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2022 (11:30 IST)

ரூ.10 லட்சம் வரை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பலாம்: மத்திய அரசு

money
வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்தியாவிலிருந்து ரூபாய் 10 லட்சம் வரை அனுப்ப எந்தவித கட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்தியாவில் இருந்து பணம் அனுப்ப சில கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தற்போது ரூபாய் 10 லட்சம் வரை எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி பணப்பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது 
 
இதுகுறித்து FCRA விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்ப எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று கூறியிருப்பது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.