1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (12:57 IST)

பாஜக வட்டச் செயலாளர் போல செயல்படும் ஆளுநர்: முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு!

பாஜக வட்டச் செயலாளர் போல செயல்படும் ஆளுநர்: முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்தியாவின் அதிரடியான முதல்வர்களில் ஒருவரான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.


 
 
மேற்குவங்கத்தில் உள்ள பர்கானாஸ் மாவட்ட பதுரியாவில் மத மோதல்கள் நடந்துள்ளது. இது குறித்து அம்மாநில பாஜகவினர் ஆளுநர் திரிபாதியை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து ஆளுநர் திரிபாதி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு போன் போட்டு பேசியதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டினார். பாஜகவுக்கு ஆதரவாக முறையில் அவர் பேசிய விதத்தால் அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார்.
 
இதுபோன்று என்னிடம் பேச வேண்டாம் என்று ஆளுநரிடம் நான் கூறிவிட்டேன். அவர் பாஜகவின் வட்டச் செயலாளர் போல செயல்படுகிறார். அவர் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பெரிதாக பேசுகிறார். அவர் சட்டத்தினால் ஆளுநர் பதவிக்கு வந்தவர். நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். அவர் தனது பதவியின் மாண்பை புரிந்து நடக்க வேண்டும் என்றார் மம்தா.