டெல்லி மாநிலத்தில் ஆளுநருக்கே முழு அதிகாரம் - உயர் நீதீமன்றம் அதிரடி

டெல்லி மாநிலத்தில் ஆளுநருக்கே முழு அதிகாரம் - உயர் நீதீமன்றம் அதிரடி


Dinesh| Last Modified வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (11:22 IST)
டெல்லி மாநிலத்தின் நிர்வாக தலைவராக துணைநிலை ஆளுநரே செயல்பட முடியும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 


டெல்லியில், அதிகாரிகள் இடம் மாற்றம், மற்றும் ஆதிகார பகிர்வில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப் ஜங்கிற்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக, டெல்லி அரசு சார்பில், டெல்லி உயர் நீதீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, டெல்லி மாநிலத்தின் நிர்வாக தலைவராக துணைநிலை ஆளுநரே செயல்பட முடியும் என்றும், அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க அவசியம் இல்லை என்றும்” தீர்ப்பளித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :