இந்தியாவின் நிலைமை கவலை அளிக்கிறது; கூகிள் 135 கோடி நிதியுதவி
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூகிள் மற்றும் சார்பு நிறுவனங்கள் 135 கோடி நிதியளித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நிலைமை கவலை கொள்ள செய்வதாக கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் “ஆக்ஸிஜன் கிடைக்காமல் இந்தியர்கள் மடிவது கவலை அளிக்கிறது. தேவையான மருந்து பொருட்களை விநியோகம் செய்வதற்காக கிவ் இந்தியா, யுனிசெப் ஆகிய அமைப்புகளுக்கு கூகிள் மற்றும் கூகிள் சார்ந்த நிறுவனங்கள் 135 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.