1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (13:47 IST)

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி: 500, 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு இந்த நிலைமை!

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி: 500, 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு இந்த நிலைமை!

டெல்லியில் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் அந்த பள்ளியின் கழிவறையில் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த வாரம் பள்ளியின் கழிவறையில் வைத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதனை பார்த்த பள்ளி நிர்வாகம் மாணவியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தது.
 
மேலும் இது குறித்து காவல்துறைக்கும் அவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற அப்துல் காதர் என்ற 51 வயது நபர் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
 
சிறுமியின் வீட்டிற்கு அருகில் அப்துல் காதர் என்ற 51 வயதான நபர் வசித்து வருகிறார். அவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 7 மாதங்களாக சிறுமியுடன் உடலுறவு செய்து வந்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி அவ்வப்போது சிறுமிக்கு 500, 1000 ரூபாய் பணம் என கொடுத்து வந்துள்ளார்.
 
மேலும் சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரைகள் வாங்கு கொடுத்தும் வந்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் 376-இன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.