இரவு நேர பார்ட்டிக்கு தாய் பணம் தராததால் மாணவி தற்கொலை


Caston| Last Modified புதன், 10 ஆகஸ்ட் 2016 (12:00 IST)
பெங்களூரில் பல்கலையில் 2-ஆம் ஆண்டு படித்துவரும் 17 வயது மாணவி ஒருவர் தன்னுடைய தாய் இரவு நேர பார்ட்டிக்கு போக பணம் கேட்டு தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
பசவேஸ்வரா அருகில் உள்ள கமல்நகரில் தன்னுடைய பெற்றோர்கள் சிவலிங்க கவுடா, பாக்யம்மாவுடன் வசித்து வரும் மாணவி அனுபமா கடந்த ஞாயிற்றுகிழமை நண்பர்கள் தினத்தையொட்டி தனது நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டிக்கு செல்ல தாய் பாக்யம்மாவிடம் 1000 ரூபாய் கேட்டுள்ளார்.
 
மாணவி கேட்ட பணம் தன்னிடம் இல்லை என பாக்யம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
வெளியே சென்றிருந்த பாக்யம்மா வீடு திரும்பும் போது தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவியின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். அதில் தற்கொலை குறித்து எந்தவித குறிப்பும் கிடைக்கவில்லை.
 


இதில் மேலும் படிக்கவும் :