1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (10:59 IST)

37வது மாடியில் இருந்து திடீரென 17வது மாடிக்கு இறங்கிய லிப்ட்: பெண்ணுக்கு நேர்ந்த கதி!

lift accident
37வது மாடியில் இருந்து திடீரென 17வது மாடிக்கு இறங்கிய லிப்ட்: பெண்ணுக்கு நேர்ந்த கதி!
37வது  மாடியிலிருந்து லிப்ட் திடீரென 17ஆவது மாடிக்கு இறங்கியதால் அந்த லிப்டில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சூப்பர் டேக் நிறுவனத்தின் 34 ஆவது மாடியில் இருந்து பெண்ணொருவர் லிப்டில் இறங்கினார். அப்போது அந்த லிப்ட் திடீரென 17 வது மாடிக்கு மிக வேகமாக இறங்கியது
 
இதன் காரணமாகவே அந்த லிப்டில் பயணம் செய்த பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேல்லும் சூப்பர் டெக் நிறுவன தலைவர் ஆர்.கே.அரோரா, நிர்வாக இயக்குநர் மோஹித் அரோரா மீது நொய்டா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது