1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (21:40 IST)

பேருந்துக்குள் இளம்பெண் குத்தாட்டம்: ஓட்டுனர் சஸ்பெண்ட்

பொது இடத்தில் வித்தியாசமான வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களிடையே டிரெண்ட் ஆக மாறி வருகிறது. இந்த நிலையில் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் 
 
டெல்லியில் அரசு பேருந்து ஒன்றில் கடந்த 12ஆம் தேதி இளம்பெண் ஒருவர் திடீரென எழுந்து நடனமாடினார். அதை ஒரு சிலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் வேடிக்கை பார்ப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானதை அடுத்து பேருந்து ஓட்டுநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து அவர் கூறிய விளக்கம் நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் 
 
பொதுச்சொத்தை அங்கீகரிக்கப்படாத செயலுக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதித்தது போக்குவரத்து விதியின்படி குற்றம் என அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் கண்ணியத்தைக் கெடுத்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது 
 
ஒரு இளம்பெண் பொழுதுபோக்காக பேருந்தில் நடனமாடிய சம்பவம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் வேலைக்கே உலை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது